அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு



பாவத்தின் தண்டனையாக தீய எண்ணங்கள் தோன்றாமலிருக்க வரம் தர வேண்டும்!தீயது என்று தெரிந்தும் மனிதன் ஒன்றை செய்கிறான் என்றால் என்ன பொருள்?. ஒன்று உடனடியாக அதனால் லாபம் கிடைப்பதால். அடுத்தது உடனடியாக சுகம் கிடைப்பதால். இதுயாருக்கு தெரியப்போகிறது? யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?. அல்லது யார் யோக்யன்? என்னை விட அதிக பாவம் செய்பவர் நன்றாகத்தானே இருக்கிறார்?. என்றெல்லாம் தன்னை சமாதானம் செய்து கொண்டுதான் ஒரு மனிதன் தீயது என்று தெரிந்தும் ஒன்றைத் தொடர்கிறான். எப்பொழுதும் இறைவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு உறுதியாக வந்துவிட்டால், அவன் தீயதை எண்ண மாட்டான், பார்க்க மாட்டான், பேச மாட்டான், செய்ய மாட்டான். தீ அது சுடும் என்பதால் அதைத்தீண்டவும் மாட்டான்.

தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக ஒருவன், அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து, எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து, ஆய்ந்து பார்த்து இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, பகுத்துப் பார்த்து இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

via சித்தனருள்

https://www.facebook.com/groups/siddhar.science
 


 
Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya

Comments

Popular posts from this blog

அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு