Posts

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு

Image
சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு பொதுநலவாதிகளைவிட சுயநலவாதிகள்தான் சுகமாக வாழ்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில், ஏன் இந்த மாறுபட்ட நிலை..?! இறைவன் அருளால் சுகம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய் (மன நிம்மதி, வறுமையில்லாத நோய் நொடியில்லாத வாழ்வு). ஒன்றை புரிந்துகொள் ஒரு மனிதனுக்கு எந்த சூழலும் நிம்மதியையோ, சந்தோஷத்தையோ தருவதில்லை. https://www.facebook.com/groups/305917699863621 அவனுடையை மன நிலையை பொறுத்துதான் வாழ்க்கை நிலை என்பது நிறைய தனம்தான் சந்தோஷம் என்றால் தனவான்கள் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய பதவிதான் நிம்மதி என்றால் பதவியில் இருக்கக்கூடியவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். ஆக ஒவ்வொரு மனிதனின் மனநிலை, மன பக்குவம், மன முதிர்ச்சி - இதை பொறுத்துதான் சுகமும், துக்கமும் உன் மனதை நீ திடமாக, வைரம்போல் உறுதியாக, வைராக்யமாக, பெருந்தன்மையாக, நேர்மையாக நீதியாக, சத்திய நெறியில் வைத்துக்கொண்டால், இறை வழியில் செல்வதற்கு உன்னை தயார்படுத்திக் கொண்டால் நீ எங்கு இருந்தாலும் சுகமாக இருக்கலாம். நலமாக இருக்கலாம். எனவே சுகம் என்கிற லோகாய வ

அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!

Image
ஆண்டாண்டுகாலம் மந்திரங்களை ஜபித்தாலும், மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால், ஓட்டைப் பாத்திரத்தில் நீரை வைத்ததுபோல் ஆகிவிடும். முதலில் பூசை, தர்மம், தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்கு, பிறர் மனதை புண் படுத்தாமல், நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துவதும் முக்கியம். அந்தப் பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும். நலம் எண்ணி, நலம் உரைத்து நலமே செய்ய, நலமே நடக்கும். பொதுச்சொத்து அல்லது கோவில் சொத்தை கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் அலைய வேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல் உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி இல்லை. நோயுள்ளவன்தான் மருந்து சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர் தான் பரிகாரம் செய்ய வேண்டும். நீங்கள் அனைவருமே, முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள்தான், உறவாடியவர்கள்தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள்..?! என்றால், "எத்தனை பிறவிகள் எடுத்தாலும்

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

Image
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள்வாக்கு விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில்  தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

Image
பாவத்தின் தண்டனையாக தீய எண்ணங்கள் தோன்றாமலிருக்க வரம் தர வேண்டும்!தீயது என்று தெரிந்தும் மனிதன் ஒன்றை செய்கிறான் என்றால் என்ன பொருள்?. ஒன்று உடனடியாக அதனால் லாபம் கிடைப்பதால். அடுத்தது உடனடியாக சுகம் கிடைப்பதால். இதுயாருக்கு தெரியப்போகிறது? யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?. அல்லது யார் யோக்யன்? என்னை விட அதிக பாவம் செய்பவர் நன்றாகத்தானே இருக்கிறார்?. என்றெல்லாம் தன்னை சமாதானம் செய்து கொண்டுதான் ஒரு மனிதன் தீயது என்று தெரிந்தும் ஒன்றைத் தொடர்கிறான். எப்பொழுதும் இறைவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு உறுதியாக வந்துவிட்டால், அவன் தீயதை எண்ண மாட்டான், பார்க்க மாட்டான், பேச மாட்டான், செய்ய மாட்டான். தீ அது சுடும் என்பதால் அதைத்தீண்டவும் மாட்டான். தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக ஒருவன், அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து, எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடு

மகான் சுகப்பிரம்மர் அருளிய மகா சூட்சும நூல் 09-06-2017

Image

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

Image
#_அகத்தியப்_பெருமானின்   அருள் வாக்கு. சுருக்கமாக நாங்கள் கூறவருவது என்னவென்றால் மனித உடம்பெடுத்த ஆத்மா, தன்னை ஆத்மா என்று உணராத வரையில் ஒரு மனிதன் எதைப் பெற்றாலும், எத்தனை உயர்வை உலகியல் ரீதியாகப் பெற்றாலும், அதனால் யாதொரு பலனுமில்லை. தன்னைத்தான் உணருகின்ற வகையில் எவனொருவனுக்கு ஒரு பிறவி அமைகிறதோ, "இது பாவம், இது புண்ணியம், இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது" என்ற தெய்வீக அறிவு கடுகளவேனும் எந்தப் ப ிறவியில் ஒருவனுக்கு உதயமாகிறதோ, நவக்ரகங்கள், ஞானியர்கள், பிறவி – இது போன்ற விஷயங்களில் ஓரளவேனும் ஈடுபாடு ஒருவனுக்கு எந்தப் பிறவியில் ஏற்படுகிறதோ அந்தப் பிறவிதான், மெல்ல, மெல்ல இறைவனை நோக்கி அழைத்து செல்லக்கூடிய முதல் படிகட்டு என்பதை புரிந்து கொண்டிட வேண்டும். ஆனால் அப்படி உணர்ந்த மனிதர்கள் கூட பல்வேறு தருணங்களில் மன ச் சோர்வை அடைந்து "இப்படியெல்லாம் இது போன்ற விஷயத்தை பேசிப்பேசி உலகியல் ரீதியாக தோற்று விட்டோமே? இதெல்லாம் தெரியாத ஒரு மனிதன் நல்ல முறையில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியில் இருக்கிறானே? எல்லா சுகங்களையும் நுகர்கிறானே?" என்று மற்ற மனிதர்களோடு தம்மை ஒப்பிட்டுப