Posts

Showing posts from June, 2017

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

Image
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள்வாக்கு விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில்  தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

Image
பாவத்தின் தண்டனையாக தீய எண்ணங்கள் தோன்றாமலிருக்க வரம் தர வேண்டும்!தீயது என்று தெரிந்தும் மனிதன் ஒன்றை செய்கிறான் என்றால் என்ன பொருள்?. ஒன்று உடனடியாக அதனால் லாபம் கிடைப்பதால். அடுத்தது உடனடியாக சுகம் கிடைப்பதால். இதுயாருக்கு தெரியப்போகிறது? யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?. அல்லது யார் யோக்யன்? என்னை விட அதிக பாவம் செய்பவர் நன்றாகத்தானே இருக்கிறார்?. என்றெல்லாம் தன்னை சமாதானம் செய்து கொண்டுதான் ஒரு மனிதன் தீயது என்று தெரிந்தும் ஒன்றைத் தொடர்கிறான். எப்பொழுதும் இறைவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு உறுதியாக வந்துவிட்டால், அவன் தீயதை எண்ண மாட்டான், பார்க்க மாட்டான், பேச மாட்டான், செய்ய மாட்டான். தீ அது சுடும் என்பதால் அதைத்தீண்டவும் மாட்டான். தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக ஒருவன், அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து, எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடு

மகான் சுகப்பிரம்மர் அருளிய மகா சூட்சும நூல் 09-06-2017

Image