அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

#_அகத்தியப்_பெருமானின் அருள் வாக்கு.


சுருக்கமாக நாங்கள் கூறவருவது என்னவென்றால் மனித உடம்பெடுத்த ஆத்மா, தன்னை ஆத்மா என்று உணராத வரையில் ஒரு மனிதன் எதைப் பெற்றாலும், எத்தனை உயர்வை உலகியல் ரீதியாகப் பெற்றாலும், அதனால் யாதொரு பலனுமில்லை. தன்னைத்தான் உணருகின்ற வகையில் எவனொருவனுக்கு ஒரு பிறவி அமைகிறதோ, "இது பாவம், இது புண்ணியம், இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது" என்ற தெய்வீக அறிவு கடுகளவேனும் எந்தப் பிறவியில் ஒருவனுக்கு உதயமாகிறதோ, நவக்ரகங்கள், ஞானியர்கள், பிறவி – இது போன்ற விஷயங்களில் ஓரளவேனும் ஈடுபாடு ஒருவனுக்கு எந்தப் பிறவியில் ஏற்படுகிறதோ அந்தப் பிறவிதான், மெல்ல, மெல்ல இறைவனை நோக்கி அழைத்து செல்லக்கூடிய முதல் படிகட்டு என்பதை புரிந்து கொண்டிட வேண்டும்.

ஆனால் அப்படி உணர்ந்த மனிதர்கள் கூட பல்வேறு தருணங்களில் மன
ச்சோர்வை அடைந்து "இப்படியெல்லாம் இது போன்ற விஷயத்தை பேசிப்பேசி உலகியல் ரீதியாக தோற்று விட்டோமே? இதெல்லாம் தெரியாத ஒரு மனிதன் நல்ல முறையில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியில் இருக்கிறானே? எல்லா சுகங்களையும் நுகர்கிறானே?" என்று மற்ற மனிதர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்து, தான் பின்பற்றி வரும் கொள்கை தவறு எனவும், தான் நடந்து வரும் பாதை தவறு எனவும்எண்ண வேண்டிய நிலைமைக்கு ஆட்பட்டு குழப்பத்தில் வாழத்துவங்குகிறான்.

-சிலம்பு யா
https://www.facebook.com/groups/siddhar.science
 


 
Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya

Comments

Popular posts from this blog

அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு